நடிகர் ஆர்.எஸ் சிவாஜி மறைவு - திரையுலகம் அஞ்சலி

by Staff / 02-09-2023 05:16:52pm
நடிகர் ஆர்.எஸ் சிவாஜி மறைவு - திரையுலகம் அஞ்சலி

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரம், குணச்சித்திர கதாபாத்திரம் என பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஆர் எஸ் சிவாஜி. இவர் இன்று காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் இன்று பிரிந்தது. 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் வரும் 'தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டீங்க சார்' என்ற அவருடைய காமெடி டயலாக் மிகவும் பிரபலம். அவரது மறைவிற்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

 

Tags :

Share via