ஓணம் பண்டிகைக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில்

by Staff / 23-08-2023 05:06:48pm
ஓணம் பண்டிகைக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில்

ஓணம் பண்டிகை கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரம் - திருவனந்தபுரம் கொச்சுவேலி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி செப்டம்பர் 2 அன்று தாம்பரம் - கொச்சுவேலி  சிறப்பு ரயில் (06047) தாம்பரத்திலிருந்து மாலை 05.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.00 மணிக்கு கொச்சுவேலி சென்று சேரும். மறு மார்க்கத்தில் செப்டம்பர் 3 அன்று கொச்சுவேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (06048) கொச்சுவேலியில் இருந்து காலை 11.40 மணிக்கு புறப்பட்டு, திருநெல்வேலி மற்றும் மதுரை ரயில் நிலையங்களுக்கு முறையே மாலை 03.10 மற்றும் 05.35 மணிக்கு வந்து சேர்ந்து அங்கிருந்து முறையே மாலை 03.15 மற்றும் 05.40  மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.00 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல் மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் டவுன், இரணியல், குழித்துறை, நெய்யாற்றின் கரா, திருவனந்தபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 14 குளிர்சாதன மூன்றடுக்கு குறைந்த கட்டண படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகளுடன் கூடிய சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்பொழுது நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via