குற்றாலத்தில் சட்டமன்ற பேரவைனுடைய உறுதிமொழி குழு ஆய்வு மேற்கொண்டது.

by Staff / 08-09-2023 04:09:56pm
குற்றாலத்தில் சட்டமன்ற பேரவைனுடைய உறுதிமொழி குழு ஆய்வு மேற்கொண்டது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் கலைவாணர் அரங்கம் பகுதியில்ரூ. 1.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு பணிகளை பார்வையிட்ட குழுவினர் அதன் தொடர்ச்சியாக குற்றாலம் பேரருவிலும் குற்றாலம் பழைய குற்றாலம் சாலையில் உள்ள தொழிலாளர்கள் தாங்கும் திருவிக விடுதியிலும் ஐந்தருவிப் பகுதியிலும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது. தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. ரவிச்சந்திரன் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் மோகன், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் விஸ்வநாதன். பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், ஆகியோர் முன்னிலையில் பல்வேறு திட்ட பணிகள்  குறித்து குற்றாலம் பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன இதன் தொடர்ச்சியாக குற்றாலம் குற்றாலநாதர் ஆலயத்தின் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 30க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் எறிந்து நாசமாகின அந்த கடைக்காரர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் இந்த குழு அதற்கு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்வதாகவும் குற்றாலம் பேரருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியை தனியாக தடுப்புச் சுவர் அமைத்து பெண்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் இந்த குழு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் கோவில் நிலத்தில் பெண்கள் உடை மாற்றும் அரை செயல்பட்டு வருவது அதனை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் என்றும் குற்றாலத்தில் 11 கோடி ரூபாய் செலவில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அருவி பகுதிகளில் தூய்மையான பணிகளை மேற்கொள்ளவும் உடனடியாக குழு பரிந்துரை செய்ததாகவும் இங்கு உள்ள கடைகளில் தின்பண்டங்கள் வைப்பது பாதுகாப்பாக ஈக்கள் மொய்க்காத வண்ணம் வைத்து பாதுகாக்க வேண்டும் என்ரும்,ரோட்டில்வைக்க கூடாது  என்றும், காலையிலேயே தான் சாதாரண மனிதனைப் போல் சாரம் கைலி கட்டிக் கொண்டு குற்றாலம் பகுதிகளை ஆய்வு செய்ததாகவும் இங்கு உள்ள கடைக்காரர்களிடம் இங்கு வரும் சுற்றுலா பயணிகளிடமும் பெண் சுற்றுலாப் பயணிகளிடமும் அவர்களுடைய தேவைகள் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்ததாகவும் பெண்கள் குளிக்கும் பகுதியில் மிகவும் பாதுகாப்புகளை அதிகரிக்க வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் சமூக விரோதிகள் யாரும் பெண்கள் குளிப்பதையோ உடைமாற்றுவதையோ வீடியோ உள்ளிட்டவைகள் எடுத்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அதனை கண்காணிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார் மேலும் குற்றாலம் பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அதற்கான முன்னெடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சி தலைவர் செய்து வருவதாகவும் தெரிவித்தார் மேலும் குற்றாலம் பேரருவிப்பகுதியில் பொதுமக்களுக்கு சென்று வரும் வகையில் பாதையில் உள்ளிட்டவைகள் சீரமைக்கும் பணிகளும் நடைபெறும் என்றும் ஆக்கிரமிப்புகள் பொதுமக்கள் நலன் கருதி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

Tags :

Share via