ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.450-க்கு சிலிண்டர்

by Staff / 10-09-2023 12:51:27pm
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.450-க்கு சிலிண்டர்

மத்தியப்பிரதேசத்தில் எல்லா குடும்பங்களுக்கும் ரூ.450-க்கு வீட்டு உபயோக சிலிண்டர் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முக்கிய வாக்குறுதிகளை பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் அரசு வழங்கி வருகிறது. காங்கிரஸ் கட்சியும் ரூ.500-க்கு சிலிண்டர் வழங்குவதாக முன்பு அறிவித்திருந்த நிலையில், போட்டியிடும் அனைத்து கட்சிகளும் வாக்குறுதிகளை வாரி இறைக்கின்றன. ஏற்கனவே மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் சிலிண்டருக்கான விலையை ரூ.200 குறைத்துள்ளது. மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது.

 

Tags :

Share via