கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

by Editor / 11-09-2023 09:18:21am
 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழ்நாட்டில் வழங்கப்பட உள்ள ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்க இன்னும் 4 நாட்களே உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுக்க மாவட்ட ஆட்சியர்கள் விண்ணப்பம் வழங்கிய மக்களை நேரில்சந்தித்து  ஆய்வு செய்ய தொடங்கி உள்ளனர்.மேலும் இந்த விண்ணப்பிபங்கள் முறையாக இன்னும் ஆய்வு செய்யப் படாமல் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் பொதுமக்கள் தரப்பிலிருந்து முதல்வரின் கவனத்திற்கு சென்ற நிலையில் கடந்த 5ஆம் தேதி தென்காசி வந்த தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலினை 50க்கும் மேற்ப்பாட்ட பெண்கள் வாகனத்தை சாலையில் மறித்து தென்காசியில் குறிப்பிட்ட வார்டுப்பாகுதியில் விண்ணப்பம் வழங்கியதாங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் 
குற்றசாட்டை முன்வைத்த சம்பவங்களும் நடந்ததால் இதில் முழுக்கவனம் எடுத்து முதல்வர் செயல்பட்டுவருவதால் இன்று அதன் இறுதிக்கட்ட ஆய்வு நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

.இந்த நிலையில்தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்ய உள்ளார். அண்ணா பிறந்தநாளான வரும் 15ஆம் தேதி இந்த திட்டம் காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட உள்ளது. காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று இறுதி ஆலோசனையை அதிகாரிகளோடு நடத்த உள்ளார். தமிழ்நாடு முழுவதும் 1.63 கோடி பேர், மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பம்அளித்துள்ளனர்.
 

 

Tags :  கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் முதல்வர் இன்று ஆலோசனை

Share via