மீளவிட்டான் - தூத்துக்குடி பிரிவில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

by Editor / 11-07-2023 11:25:58pm
மீளவிட்டான் - தூத்துக்குடி பிரிவில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு  அனந்த் மதுகர் சௌத்ரி, ரயில்வே பாதுகாப்பு ஆணையர், தெற்கு வட்டம், பெங்களூரு புதிதாக இரட்டிப்பு மற்றும் மின்மயமாக்கப்பட்ட  மீளவிட்டான் - தூத்துக்குடி பிரிவில்  (7.67 கிமீ) 11 ஜூலை இன்று சட்டப்பூர்வ ஆய்வை நடத்தினார்.மோட்டார் ட்ராலி மூலம் செய்யப்படும் ஆய்வு கலாய் 9 மணிக்கு மீளவிட்டானில் இருந்து தொடங்கி 1 மணிக்கு தூத்துக்குடியில் நிறைவடைந்தது.

மோட்டார் ட்ராலி  சோதனைக்குப் பிறகு,எலக்ட்ரிக் லோகோவைப் பயன்படுத்தி அதிவேக சோதனை இப்பிரிவில் நடத்தப்பட்டது,இந்த சோதனை ரயில் தட்டப்பாறை ரயில் நிலையத்தில் இருந்து 3.30 மணிக்கு புறப்பட்டு 4 மணிக்கு தூத்துக்குடி வந்தடைந்தது. மீண்டும் தூத்துக்குடியிலிருந்து 4.30 மணிக்கு புறப்பட்டு 5  மணிக்கு தட்டப்பாறையில் நிறைவடைந்தது. பொதுமக்கள், ரயில் பாதைக்கு அருகாமையில் வசிப்பவர்கள், ரயில்வே ஊழியர்கள் மற்றும் மீ ளவிட்டான் மற்றும் தூத்துக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளம்/ மின்சாரம் / சிக்னல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள இதர ரயில்வே பணியாளர்கள் வேக சோதனையின் போது ரயில் பாதை அருகே வரவோ  அல்லது கடக்கவோ வேண்டாம் என எச்சரிக்கப்பட்டனர்.  மதுரை - தூத்துக்குடி இரட்டிப்பு மின்மயமாக்கல்.
மீளவிட்டான் - தூத்துக்குடி இரட்டிப்புப் பணி, 158.81 கிமீ மதுரை -தூத்துக்குடி இரட்டிப்பு மற்றும் மின்மயமாக்கல் பணியின்  ஒரு பாகமாக  இரயில்வே அமைச்சகத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இந்த திட்டம் ஆகஸ்ட் 2017 இல் அனுமதிக்கப்பட்டு செயல்படுத்துவதற்காக ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. திட்ட மதிப்பீடு 1890.66 கோடி.திட்டம் முடிக்கப்பட்டு பின்வரும் கட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.கடம்பூர் - தட்டப்பாறை (30கிமீ) - 15.07.2020
திருமங்கலம் - துலுக்கபட்டி (41.18 கிமீ) - 31.03.2021
தட்டப்பாறை  - மிளவிட்டான் (7.47 கி.மீ.) -18.08.2021
துலுக்கபட்டி- கோவில்பட்டி (32.86கிமீ)-31.03.2022
கோவில்பட்டி - கடம்பூர் (22.31 கிமீ )-11.01.2023
மதுரை - திருமங்கலம் (17.32 கிமீ) - 03.03.2023
மார்ச் 2023 வரை திட்டத்திற்கான செலவு சுமார் ரூ. 1765.39 கோடி.
மீளவிட்டான் மற்றும் தூத்துக்குடி யார்டுகளை மறுவடிவமைப்பு செய்வது திட்டத்தின் கீழ் வரவிருக்கும் பணி ஆகும். மீளவிட்டான் - தூத்துக்குடி பிரிவில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

Tags :

Share via