தெற்காசியாவின் முதல் வாட்டர் மெட்ரோ சேவை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

by Editor / 25-04-2023 01:55:16pm
 தெற்காசியாவின் முதல் வாட்டர் மெட்ரோ சேவை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

தெற்காசியாவின் முதல் வாட்டர் மெட்ரோ சேவையை நாட்டில் முதல்முறையாக கேரள மாநிலம் கொச்சியில் இன்று முதல் வாட்டர் மெட்ரோ சேவை தொடங்குகிறது.நாட்டின் முதலாவது நீர்வழி மெட்ரோ படகுப் போக்குவரத்து சேவையை இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
கொச்சி நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள கடலில் உள்ள 11 தீவுகளை இணைக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது.இதன் மூலம் கடலில் படகு மூலம் 11 தீவுகளுக்கு சென்று ரசிக்கலாம். 
புதிய திட்டம் மூலம் தரைவழியில் மட்டுமே இருந்த மெட்ரோ திட்டம் தற்போது கடல் வழியிலும் தொடங்கப்படவுள்ளது. கொச்சி படகு குழாமில் இருந்து புறப்பட்டு நீதிமன்றம், வைபின், காக்கநாடு, துறைமுகம், வெலிங்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கு படகு இயக்கப்படவுள்ளது. சுற்றுலா படகு போக்குவரத்து சேவைக்காக 9 படகுகள் சோதனை ஓட்டம் முடிந்து தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
ரு 747 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது; ஒரு படகில் 100 பேர் வரை பயணிக்கலாம்.
இந்த படகில் குறைந்த கட்டணம் ரூ 20, அதிக கட்டணம் ரூ 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
78 கி.மீ. சுற்றளவில் படகு போக்குவரத்து இயக்கப்பட இருக்கிறது. வந்தே பாரத் ரயிலில் உள்ளது போல் இந்த கப்பலில் கழிப்பிடம், குளிர்சாதன வசதி, உணவு உள்ளிட்ட நவீன வசதிகள் உள்ளன. உயர்நீதிமன்ற சந்திப்பு மற்றும் வைபின் இடையே வாட்டர் மெட்ரோ திட்டம் தொடங்குகிறது.இந்த திட்டம் நகர்ப்புறத்தில் போக்குவரத்து நெரிசலை குறைத்து காற்று மாசையும் குறைக்கிறது. இந்த படகில் பயணம் செய்ய வாராந்திர பாஸுக்கு 180 ரூபாயும் மாதாந்திர பாஸுக்கு ரூ 600 கட்டணமும் 3 மாதங்களுக்கு ரூ 1500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த படகில் பாதுகாப்பு அம்சமான சிசிடிவி கேமராவும் அதை செயல்படுத்த கட்டுப்பாட்டு மையமும் இருக்கிறது. உடல் ஊனமுற்ற, வயதான பயணிகளின் வசதிக்காக மிதக்கும் படகு நிறுத்தங்கள் உள்ளன; சேஃப்டி ஜாக்கெட்டுகளும் வழங்கப்படுகின்றன. Kochi One செயலி மூலம் டிஜிட்டல் வழியாக படகில் பயணம் செய்ய கட்டணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

 தெற்காசியாவின் முதல் வாட்டர் மெட்ரோ சேவை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
 

Tags :

Share via