இவர்களின் எதிர்காலம் கல்வியை சார்ந்துள்ளது... ஆப்கானிஸ்தான் குறித்து யுனெஸ்கோ கருத்து...

by Admin / 20-08-2021 01:17:48pm
இவர்களின் எதிர்காலம் கல்வியை சார்ந்துள்ளது... ஆப்கானிஸ்தான் குறித்து யுனெஸ்கோ கருத்து...

ஆப்கானிஸ்தானில் வாழும் அனைவருக்கும் கல்வி கிடைப்பதற்கான வழிவகை செய்யப்படும் என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
 
பழமைவாத தலிபான்களின் கையில் சிக்கியுள்ளதால், ஆப்கான் மக்களின் எதிர்கால நிலை கேள்விக் குறியாகியுள்ளது. அடிப்படை உரிமையான கல்வி கூட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கிடைக்காத மிகவும் மோசமான நிலை ஏற்பட உள்ளதாக பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், ஆப்கான் மக்களுக்கான தொழில்நுட்ப வசதிகளை கடந்த 1948லிருந்து செய்து கொடுத்து வரும் யுனெஸ்கோ அமைப்பு, அனைவரும் கல்வி கற்பதற்கான வழிவகை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
 
மேலும் ஆப்கானின் வளர்ச்சி கல்வியை சார்ந்து இருப்பதால், பெண்கள் படிப்பை விடாது தொடர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாது, ஆப்கான் மக்களின் கல்விக்காக, உலக நாடுகள் உதவ முன்வர வேண்டும் எனவும் யுனெஸ்கோ பொது இயக்குனர் ஆட்ரே அசோவ்லே  கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Tags :

Share via