ஆபத்தில் இருக்கும் ஆப்கன் வீரர்களின் குடும்பங்கள்... ஆப்கன் வீரர்கைளை வீடு வீடாக தேடும் தலிபன்கள்...

by Admin / 20-08-2021 01:14:46pm
ஆபத்தில் இருக்கும் ஆப்கன் வீரர்களின் குடும்பங்கள்... ஆப்கன் வீரர்கைளை வீடு வீடாக தேடும் தலிபன்கள்...

அமெரிக்க ராணுவத்திற்கு உதவிய ஆப்கன் வீரர்களை வீடு, வீடாகத் தேடும் தலிபான்கள் - ஐ.நா. அறிக்கை
...  
அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுடன் இணைந்து பணியாற்றிய ஆப்கானியர்களை தாலிபான்கள் வீடு வீடாக தேடி வருவதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐ.நா மதிப்பீட்டு ஆலோசகர்கள் குழு, அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுக்கு உதவிய ஆப்கானியர்கள் மற்றும் தாலிபான்களுக்கு எதிராக செயல்பட்ட ராணுவ அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என அறிவித்த தாலிபான்கள் தற்போது அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுடன் இணைந்து பணியாற்றிய ஆப்கானியர்களை வீடு வீடாக புகுந்து தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
 
ஆப்கன் ராணுவம், காவல்துறை மற்றும் உளவு அமைப்பை சேர்ந்தவர்கள் தற்போது ஆபத்தில் இருப்பதாக குறிப்பிட்டதுடன், அவர்களை மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரையும் கைது செய்யும் நோக்கில் இத்தகைய தேடுதல் வேட்டையை நடத்தி  வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

காபூல் விமான நிலைய நுழைவு வாயில் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை சாவடிகளை அமைத்து அனைத்து தனிநபர்களும் மிகுந்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவதாகவும் அறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via