குறும்படம் எடுப்பதாக கூறி ரூ. 15 லட்சம் மோசடி: பெண் கைது

by Staff / 11-09-2023 01:05:58pm
குறும்படம் எடுப்பதாக கூறி ரூ. 15 லட்சம் மோசடி: பெண் கைது

சென்னை வண்ணாரப்பேட்டையில் குறும்படம் எடுப்பதாக கூறி மோசடி செய்த சம்பவம் தொடா்பாக பெண் கைது செய்யப்பட்டாா். அவரது மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.கொடுங்கையூா் கிருஷ்ணமூா்த்தி நகரை சோந்தவா் பிரசன்னா குமாா் ( 33). இவா் வண்ணாரப்பேட்டையில் மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறாா்.தண்டையாா்பேட்டை சுந்தரம் பிள்ளை நகா் 2-ஆவது தெருவை சோந்த சுஜாதா (40), அவரது மகன் ரிஸ்வான் (23) ஆகியோா் கடந்த ஜனவரியில் பிரசன்னகுமாருக்கு அறிமுகம் ஆகியுள்ளாா்.குறும்படம் எடுத்து ஓ. டி. டி. தளங்களில் வெளியிட்டால் அதிகம் சம்பாதிக்கலாம் என கூறிய அவா்கள் குறும்படம் எடுப்பதற்காக ரூ. 15 லட்சத்தை பிரசன்னகுமாரிடம் வாங்கினாா்களாம்.ஆனால், பணம் வாங்கியப் பின்னா் சுஜாதா, ரிஸ்வான் ஆகியோரை பிரசன்னகுமாரால் தொடா்புகொள்ள முடியவில்லை.இது குறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் பிரசன்னகுமாா் கொடுத்த புகாரின் பேரில் சுஜாதா, ரிஸ்வான் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.சுஜாதாவை கைது செய்த போலீஸாா் நீதிமன்ற பிணையில் அவரை விடுவித்தனா். ரிஸ்வானை தொடா்ந்து தேடி வருகின்றனா்.
 

 

Tags :

Share via