காவிரி சிக்கல் - அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டவும்

by Staff / 13-09-2023 01:50:09pm
காவிரி சிக்கல் - அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டவும்

காவிரி சிக்கலில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிக்கவும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கருகும் நிலையில் உள்ள குறுவைப் பயிர்களைக் காக்க வினாடிக்கு 5000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு கர்நாடக அரசுக்கு ஆணையிட்டிருக்கிறது. இந்த நீர் தமிழகத்திற்கு போது மானதல்ல என்றாலும் கூட, அதைக் கூட தமிழகத்திற்கு திறந்து விட முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவும், துணை முதல்வர் டி. கே. சிவக்குமாரும் அறிவித்துள்ளனர்.கர்நாடக அரசின் இந்த நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது. காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளின் அடிப்படையில் தமிழகத்துக்கு கர்நாடக அரசு இன்று வரை 102. 30 டி. எம். சி தண்ணீர் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், கர்நாடகம் இதுவரை 35 டி. எம். சி தண்ணீரைக் கூட வழங்கவில்லை.

 

Tags :

Share via