மோசடியில் ஈடுபட்ட தொண்டு நிறுவன இயக்குனர் கைது

by Staff / 15-09-2023 02:40:01pm
மோசடியில் ஈடுபட்ட தொண்டு நிறுவன இயக்குனர் கைது

தூத்துக்குடி இன்னாசியர் புரத்தில் நீம் பவுண்டேஷன் உரிமையாளர் லூயிஸ் ராஜ்குமார் மற்றும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான அவரது மனைவி கவிதா ஆகியோர் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல் குறைபாடு உடைய மாணவர்களின் கற்றல் திறமையை மேம்படுத்தும் வகையில் பயிற்சி அளித்து பலருக்கு ஆசிரியர் பணியிடம் வழங்குவதாக கூறி மாவட்ட முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆண் பெண் ஆசிரியரிடம் தலா 50 ஆயிரம் ரூபாய் வசூல் செய்து கல்வித்துறை உதவியுடன் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் செய்துள்ளார்.இந்நிலையில் சில மாதங்கள் மட்டும் 15 ஆயிரம் சம்பளம் வாங்கிவிட்டு தொண்டு நிறுவனம் நஷ்டத்தில் உள்ளது எனவே சம்பளம் கிடையாது என்று லூயிஸ் ராஜ்குமார் ஏமாற்றியுள்ளார் இதைத் தொடர்ந்து பாதிக்கபட்ட நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி யிடம் புகார் அளித்தனர்.இதைத் தொடர்ந்து எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியரிடம் ஆசிரியர் பணி வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட லூயிஸ் ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி கவிதா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் இதைத் தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடியில் ஈடுபட்ட நீம் தொண்டு நிறுவன உரிமையாளர் லூயிஸ் ராஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via