மகளிர் உரிமைத் தொகையை துவக்கி வைத்த வருவாய்த்துறை அமைச்சருக்கு நூற்றுக்கணக்கான பெண்கள் மலர்த்தூவி வரவேற்பு.

by Editor / 15-09-2023 10:13:07pm
 மகளிர் உரிமைத் தொகையை துவக்கி வைத்த வருவாய்த்துறை அமைச்சருக்கு நூற்றுக்கணக்கான பெண்கள் மலர்த்தூவி வரவேற்பு.

தென்காசியில் மகளிர் உரிமைத் தொகையை துவக்கி வைத்த வருவாய்த்துறை அமைச்சருக்கு நூற்றுக்கணக்கான பெண்கள் மலர்த்தூவி வரவேற்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அண்ணா பிறந்தநாளான இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  ரூ.1,000 உரிமை தொகையானது அவரவர் வங்கிக் கணக்குகளை வரவு வைக்கப்பட்டு வருகிறது.வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அரசு முத்திரை, திட்டத்தின் பெயர், வங்கி பெயர், பயனாளி பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் பிரத்யேகமாக ஏடிஎம் அட்டையும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டையையும் பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் பயனாளிகளுக்கு ஏடிஎம் அட்டை வழங்கும் நிகழ்வு தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தமிழக வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மகளிர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தமிழகத்தில் பெண்களுக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது முன்னாள் முதல்வர் கருணாநிதி மகளிர் நலத்திட்டங்களில் அக்கரை காட்டியது போல் தற்போது முதல்வரான ஸ்டாலின் அவரும் தொடர்ந்து மகளிர்வதற்கு தேவையான நலத்திட்டங்களை செய்து வருவதாக குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

முன்னதாக விழா அரங்கிற்கு காரில் வருகை தந்த அமைச்சர் வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ராமச்சந்திரனுக்கு வழி நெடுகிலும் பெண்கள் மலர் தூவி உற்சாக வரவேற்ப்பளித்தனர். இதில் அமைச்சர் கார் முழுவதும் பூ மழையால் நனைந்தபடி விழா அரங்கேற்க்கு வருகை தந்தது அனைவரிடமும் வியப்பை ஏற்படுத்தியது. 

 மகளிர் உரிமைத் தொகையை துவக்கி வைத்த வருவாய்த்துறை அமைச்சருக்கு நூற்றுக்கணக்கான பெண்கள் மலர்த்தூவி வரவேற்பு.
 

Tags :

Share via