பெரியார் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை

by Staff / 17-09-2023 12:44:00pm
பெரியார் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை

தந்தை பெரியாரின் 145வது பிறந்த நாளை முன்னிட்டு, சேலம் கோட்டை பகுதியில் அமைந்துள்ள பெரியாரின் திருவுருவச்சிலைக்கு இன்று மாலை அணிவித்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், முத்துசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர். இது பற்றி ட்வீட் செய்துள்ள உதயநிதி, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 145வது பிறந்த நாளை முன்னிட்டு, சேலம் கோட்டை பகுதியில் அமைந்துள்ள பெரியார் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மரியாதை செலுத்தினோம். பெரியாரின் பிறந்த நாளையொட்டி சமூகநீதி நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டோம். மூட நம்பிக்கைகளை ஒழித்து மானுடம் காக்க பெரியார் வழியில் அயராது உழைப்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via