சவர்மா கடைகளில் ஆய்வு: கெட்டுப்போன இறைச்சிகள் அழிப்பு.

by Staff / 19-09-2023 05:22:36pm
சவர்மா கடைகளில் ஆய்வு: கெட்டுப்போன இறைச்சிகள் அழிப்பு.

நாமக்கல் நகரில் சவர்மா சாப்பிட்ட மாணவி உடல் நலக்குறைவால் இறந்ததைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத் துறைச் செயலாளர் உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆகியோரது உத்தரவின் படியும், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். தங்கவிக்னேஷ் அறிவுரையின் படியும் பெருந்துறையில் 5 சவர்மா விற்பனை கடைகள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட அசைவ உணவு விற்பனை கூடங்களில் சவர்மா தயாரிக்க வைக்கப்பட்டுள்ள கோழி இறைச்சி, மசாலா தயிர், மயோனிஸ் புதினா மற்றும் காய்கறி வகைகளின் தரம், ஃப்ரீசரில் உணவுப்பொருள் தயார் செய்ய வைக்கப்பட்டுள்ள இறைச்சி வகைகள் மற்றும் இதர உணவு பொருட்கள் குறித்தும் சுகாதாரமான சூழ்நிலையில் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறதா என்றும் உணவு கையாளுபவர்களின் தன் சுத்தம் குறித்தும், பெருந்துறை வட்டார உணவு பாதுகாப்பு முத்துகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

 

Tags :

Share via