சென்னையில் 365 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

by Staff / 20-09-2023 01:32:46pm
சென்னையில் 365 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

சென்னையில் உள்ள இறைச்சி உணவகங்களில் 365 கிலோ கெட்டுப்போன இறைச்சிகளை உணவு பாதுக்காப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து கிருமி நாசினி கொண்டு அழித்தனா்.அண்மையில் நாமக்கல் மாவட்டத்தில் ஷவா்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த நிலையில் அனைத்து உணவகங்களிலும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் அறிவுறுத்தலின் படி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா். இதில் சென்னையில் மேற்கு மாம்பலம், அரும்பாக்கம், தியாகராய நகா், நுங்கம்பாக்கம் உள்பட பல்வேறு பகுதியில் உள்ள 43 கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை ஆணையா் தலைமையில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது ரசாயனம் சோக்கப்பட்ட கோழி இறைச்சி மற்றும் உண்ணத் தகாத கெட்டுப்போன இறைச்சி உணவுப் பொருள்கள் என மொத்தம் 365 கிலோ எடையுள்ள உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த உணவுப் பொருள்கள் பின்னா் கிருமி நாசினி கொண்டு அழிக்கப்பட்டன.இதில் இரு ஷவா்மா கடைகள் உட்பட 3 உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது. ஆய்வு செய்த அனைத்து உணவகங்களுக்கும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தாக்கீது வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஏழு உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

Tags :

Share via