பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

by Staff / 21-09-2023 04:38:24pm
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

அண்ணா குறித்து நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. இன்று கோவை விமான நிலையத்தில் பா. ஜ. க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கடந்த காலங்களில் இந்தியா கூட்டணி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் எனவும் நீண்ட காலத்திற்கு பிறகு இச்சட்டம் நிறைவேறியுள்ளது எனவும் தெரிவித்தார். சென்செக்ஸ் முடிந்ததும் அடுத்து வரும் தேர்தலில் இந்த இட ஒதுக்கீடு அமலில் வரும் என கூறிய அவர் பாஜக கட்சிக்குள் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கி வருகிறது என்றார். மேலும் இதை பெண்கள் உரிமையாக பாஜக பார்க்கிறது எனவும் இதனை மனப்பூர்வமாக வரவேற்கிறோம் எனவும் தெரிவித்தார். வெகு விரைவில் 33 சதவீதத்திற்கு மேல் பெண்கள் சட்டமன்றம், நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள் என தெரிவித்த அவர், ஏக மனதாக அனைத்து கட்சிகளும் இதனை வரவேற்றுள்ளனர் என்றார். இரண்டு முறை இதற்கு முன்பு நாடாளுமன்ற எம். பி. க்கள் சீட் உயர்த்தியுள்ளோம் என்றார். இதில் ஸ்டாலின் சொல்வது போல எந்த சதியும் இல்லை எனவும் சதி என்ற வார்த்தையை முதல்வர் எப்படி பயன்படுத்தலாம்? என கேள்வி எழுப்பினார். அண்ணாமலைக்கும், அதிமுகவுக்கும் பிரச்சனை இல்லை எனவும் பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் பிரச்சனை இல்லை எனவும் தெரிவித்தார்.

 

Tags :

Share via