ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியம் இல்லை. வைகோ பேட்டி.

by Staff / 23-09-2023 04:25:13pm
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியம் இல்லை. வைகோ பேட்டி.

சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக அரசுக்கு கேடு செய்யும் வேலையில் ஈடுபட்டிருக்கும் தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை பதவியில் இருந்து நீக்க வேண்டும், திரும்பப் பெறவேரும் என்கிற கோரிக்கையை வைத்து மதிமுக சார்பாக 57 எம்பிக்கள், 32 எம்எல்ஏக்களும், 50 லட்சம் கையெழுத்து பகுதிகளுடன் நானும் கணேசமூர்த்தியும் குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர் செயலாளரிடத்தில் ஒப்படைத்து இருக்கிறோம். இது சரித்திர பிரசித்தி பெற்ற கூட்டத்தொடர் ஆகும் ஏனெனில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த பாராளுமன்றம் வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறது. இருந்தாலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் அதில் தனி ஒதுக்கீடு வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்திருக்கிறோம்.ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் ஜான் பீட்டர் என்பவரின் குடும்பத்தில் ஜெபம் செய்யக்கூடாது என்று இந்து முன்னணியினர் அவர்களை தாக்கி கலவரத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்றார்.தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

 

Tags :

Share via