சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஷால்

by Staff / 26-09-2023 04:52:16pm
சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஷால்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால், எஸ்.ஜெ. சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மார்க் ஆண்டனி. சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' பட செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் விஷால், "சிறிய பட்ஜெட் வைத்துக்கொண்டு படம் எடுக்க வராதீர்கள்" என பேசி இருந்தார். இந்த பேச்சு திரைத்துறையில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சிறிய பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் பலரும் நடிகர் விஷாலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தொடர் தோல்வி படங்களை கொடுத்த விஷால், ஒரு படம் வெற்றி பெற்றதும் இப்படி பேசுவது சரியல்ல என்ற கருத்தும் நிலவி வருகிறது.

 

Tags :

Share via