மலைப்பாதையில் மணல் மூட்டைகளை வைத்து 23 பெட்டியுடன் இரண்டு எஞ்சின் பொருத்தி சோதனை ரயில் இயக்கம்.

by Editor / 10-01-2024 10:48:37pm
 மலைப்பாதையில் மணல் மூட்டைகளை வைத்து 23 பெட்டியுடன் இரண்டு எஞ்சின் பொருத்தி சோதனை ரயில் இயக்கம்.

தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கும் அப்போதே ஆங்கில அரசால் 1903 ஆம் ஆண்டு செங்கோட்டை வழியாக கேரள மாநிலத்திற்கு மலைகளைக் குடைந்து ஆரியங்காவு பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளமுள்ள ஒரு குகை உள்ளிட்ட மூன்று குகைகளும் வரலாற்று சிறப்புமிக்க 13 கண் பாலமும் உள்ளிட்ட பல்வேறு சிறிய சிறிய பாலங்களையும் மலை பாதையில் அமைத்து கொல்லம் திருநெல்வேலி கொல்லம் சென்னை கொல்லம் வேளாங்கண்ணி திருவனந்தபுரம் சென்னை ஆகிய ரயில்கள் செங்கோட்டை வழியாக இயக்கப்பட்டு வந்தது ரயில் பாதை பிராட்கேச் ரயில் பாதையாக மாற்றப்பட்டு தற்பொழுது 14 பெட்டியுடன் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன இந்த வழியே கொல்லம் சென்னை எக்ஸ்பிரஸ் பாலருவி எக்ஸ்பிரஸ் மேலும் வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் கொல்லம் மதுரை பயணிகள் ரயில் உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன மேலும் தற்பொழுது கொல்லம் முதல் புனலூர் வரையிலும் பகவதிபுரத்தில் இருந்து புனலூர் வரையிலும் மின்பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்று வருகின்றன இதன் தொடர்ச்சியாக இந்த தடத்தில் 22 பெட்டிகளுடன் ரயில்களை இயக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன இதன் தொடர்ச்சியாக ரயில்வே நிர்வாகம் அதிக வளைவுகள் மற்றும் மலைப்பாதைகள் நிறைந்து இருப்பதால் 22பெட்டியுடன் ரயில்களை இயக்குவதற்கு தாமதம் செய்து வந்த நிலையில் தற்பொழுது அதனை பரிச்சாத்த முறையில் ஆய்வு செய்யும் பணிகளை இன்று ரயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளது அதன் தொடர்ச்சியாக முன்னும் பின்னும் இரண்டு இஞ்சின்கள் பொருத்தப்பட்டு 23 பெட்டிகளுடன் பயணிகள் பெட்டி விஸ்டாம் கோச் சரக்கு பெட்டி உள்ளிட்ட கோச்சிகள் அடங்கிய ரயில் பெட்டிகளில் பயணிகளுக்கு பதில் ஒவ்வொரு இருக்கையிலும் மணல் மூட்டைகளை வைத்து மலைப்பாதையில் செங்கோட்டையில் இருந்து அந்த ரயில் 1235 மணிக்கு வந்தடைந்ததை தொடர்ந்து 12 50 மணிக்கு இயக்கத்தை தொடங்கியது மேலும் இந்த ரயில் இன்று முதல் எடமன் தென்மலை இடையே உள்ள கடினமான பகுதிகளில் சாதாரண டீசல் இன்ஜின் பொருத்தி மூன்று நாட்களுக்கு 8முறையும், அல்கோ என்று அழைக்கப்படும் நவீன டீசல் இன்ஜின் பொருத்தி நான்கு நாளைக்கு ஒரு நாளைக்கு எட்டு முறை என 32 முறையும் இயக்கப்பட உள்ளன இதன் தொடர்ச்சியாக இந்த தடத்தில் இனி வரும் காலங்களில் 22 பெட்டிகளுடன் ரயில் இயக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது மேலும் இன்று முதல் இயக்கப்படும் இந்த ரயிலில் நவீன வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன ஒவ்வொரு பெட்டிகளிலும் ஸ்கேனர் வசதிகளும் எந்தெந்த பகுதிகளில் இடர்பாடுகள் உள்ளன என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்வதற்கு தானியங்கி ஸ்கேனர்கள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

 மலைப்பாதையில் மணல் மூட்டைகளை வைத்து 23 பெட்டியுடன் இரண்டு எஞ்சின் பொருத்தி சோதனை ரயில் இயக்கம்.
 

Tags :  மலைப்பாதையில் மணல் மூட்டைகளை வைத்து 23 பெட்டியுடன் இரண்டு எஞ்சின் பொருத்தி சோதனை ரயில் இயக்கம்.

Share via