பரபரக்கப்போகும் பாராளுமன்றத்தேர்தல் அதிரடிமாற்றங்களை நோக்கி அதிமுக 

by Editor / 27-09-2023 10:19:09pm
பரபரக்கப்போகும் பாராளுமன்றத்தேர்தல் அதிரடிமாற்றங்களை நோக்கி அதிமுக 

சென்னை: அதிமுகவில் காலியாக இருந்த 5 மாவட்டச் செயலாளர்கள் பதவிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவில் காலியாக இருந்த பதவிகளுக்கு புதிதாக நிர்வாகிகளை நியமித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் வெளியேறிய நிலையில், அதிமுகவில் கன்னியாகுமரி, தேனி, பெரம்பலூர், தஞ்சை உள்பட சில மாவட்டச் செயலாளர் பதவிகள் காலியாக இருந்து வந்தன. இந்நிலையில், அந்தப் பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி கன்னியாகுமரி (கிழக்கு) மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளராக, முன்னாள் துணை மேயர் சீனிவாசன் புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்எல்ஏ இளம்பை தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் (கிழக்கு) மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்எல்ஏ ராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் (மத்திய) மாவட்டச் செயலாளராக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவின் கழக அமைப்புச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, அரசு தலைமை முன்னாள் கொறடா மனோகரன், முன்னாள் மாவட்ட கழகச் செயலாளர் ராமு, வடசென்னை தெற்கு மாவட்டம் ராயபுரம் மனோ, துறை செந்தில், காந்தி, ஆகியோர் கழக அமைப்புச் செயலாளர் களாகவும்,சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை வழக்கறிஞர் பிரிவு செயலாளராகவும், முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளராகவும், செல்வி விந்தியா கழக கொள்கை பரப்பு இணைச் செயலாளராகவும், அய்யாதுரை பாண்டியன் கழக கொள்கை பரப்பு துணை செயலாளராகவும்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராகவும், அயோத்திபட்டிணம் தனபால் அண்ணா தொழிற்சங்க பேரவையினுடைய துணைச் செயலாளராகவும், பாலமுருகன் வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளராகவும், மாரப்பன் வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளராகவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மருத்துவர் அணியினுடைய இணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.பாஜகவின் கூட்டணியை முறித்தகையோடு விஜயவாடாவில் உள்ள கனக துர்க்கை அம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்ய சென்ற நிலையில் அதிரடியாக கட்சியை பலப்படுத்தும் வண்ணமும்,வரும்  பாராளுமன்றத்தேர்தலில் குறிப்பிட்ட சமுதாயத்தின் வாக்குவங்கியை தனதாக்கிக்கொள்ளும்  நடவடிக்கைகளிலும் அவர் இறங்கிவிட்டதாகவும்,அதற்கான பணிகளை தொடங்கிவிட்டதாகவும்,தென்மாவட்டத்தை சார்ந்தவர்களுக்கு அதற்காகவே பதவிகளை வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.எது எப்படியோ பரபரக்கப்போகும் பாராளுமன்றத்தேர்தல் அதிரடிமாற்றங்களை நோக்கி அதிமுக காயைநகற்றத் தொடங்கிவிட்டது.
.

 

Tags : பரபரக்கப்போகும் பாராளுமன்றத்தேர்தல் அதிரடிமாற்றங்களை நோக்கி அதிமுக 

Share via