ஸ்ரீ காளிகாம்பாள் கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சென்று விட்டதாக கருதி போராடியவா்கள் கைது

by Admin / 04-10-2023 07:52:04am
 ஸ்ரீ காளிகாம்பாள் கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சென்று விட்டதாக கருதி போராடியவா்கள் கைது

சென்னை பாரி முனையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளிகாம்பாள் கோவில் இந்து அறநிலையத்துறையில் கட்டுப்பாட்டில் சென்று விட்டதாக தகவல் பரவியதை அடுத்து பாரதிய ஜனதா கட்சியினர் இந்து அமைப்பினர் அரசின் இந்த முடிவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காளிகாம்பாள் கோவில் விஸ்வகர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட கோயிலாகும் .இந்த கோவில் விஸ்வகர்மா சேவர்த்திகள் சங்கத்தின் சார்பாக சேவர்த்திகளாக  பதிவு செய்யப்பட்டவர்களின் வாக்குகள் அடிப்படையில் தேர்தல் நடைபெற்று அதிலிருந்து 5 பேர் அறங்காவலராக நியமிக்கப்படுவர். இது காலம் காலமாக இருக்கக்கூடிய நிர்வாக நடைமுறை. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறங்காவலர் தேர்தலில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக, அரசு சார்பில் தக்கார் ஒருவர் நியமிக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தின் அடிப்படையில் அறங்காவலர் தேர்தலை நடத்தி முடித்து அறங்காவலர்கள் கோவில் நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது .அதை தொடர்ந்து நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அறங்காவலர் தேர்தல் நடைபெற்று ஐந்து பேர் அறங்காவலராக தேர்ந்தெடுக்கப்பட்டு ,கோயில் நிர்வாகத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக நிர்வகித்து வருகின்றனர்.

அக்டோபர் மாதத்தில் இருந்து 2024 ஏப்ரலுக்குள் அறங்காவலர் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு கோவில் நிர்வாகத்தை அவர்கள் மேற்கொள்வதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கின்ற நிலையில், திடீரென்று கோயில் நிர்வாகத்தில் அரசு தலையிட்டு தக்காரை நியமித்திருப்பதாக கருதி, பாரதிய ஜனதா கட்சியினரும் இந்து அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக அவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர் .

அரசு கோவிலை கைப்பற்ற படவில்லை என்றும் நிர்வாகம் நடைபெறுவதற்காகவே இந்து அறநிலையை துறையால் தக்கார் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் அறங்காவலர் தேர்தல்  முடிவுற்று அறங்காவலர்கள் பொறுப்பேற்றபின் அரசு இதிலிருந்து தக்காரை விலக்கிக் கொள்ளும் என்கிற தகவல் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விளக்கம் பெறப்பட்டு போராட்டத்தை கைவிட்டதாகவும் தகவல்.

 

Tags :

Share via