ஆசிய விளையாட்டுப் போட்டி-15 தங்கம், 26- வெள்ளி மற்றும் 28- வெண்கலத்துடன் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

by Admin / 04-10-2023 08:30:14am
ஆசிய விளையாட்டுப் போட்டி-15 தங்கம், 26- வெள்ளி மற்றும் 28- வெண்கலத்துடன் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்இந்தியா பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. 15 தங்கம், 26 வெள்ளி மற்றும் 28 வெண்கலத்துடன்........

. 1000 மீ ஆடவருக்கான கேனோ இரட்டையர் ஓட்டத்தில், இந்தியாவின் அர்ஜூன் சிங் மற்றும் சுனில் சிங் சலாம் ஜோடி 3:53.329 நேர முடிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர்.. இந்த போட்டியில் உஸ்பெகிஸ்தான் (தங்கம் 3:43.796) மற்றும் கஜகஸ்தான் (வெள்ளியுடன் 3:49.991) ஆகியவை முதல் இரண்டு இடங்களைப் பிடித்தன..
,

பெண்களுக்கான 54 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் சீனாவின் யுவான் சாங்கிடம் தோல்வியடைந்த ப்ரீத்தி குத்துச்சண்டையில் வெண்கலம் வென்றார்..
5000 மீட்டர் ஓட்டத்தில் பாருல் சவுத்ரியும், பெண்களுக்கான ஈட்டி எறிதலில் அன்னு ராணியும் தங்கம் வென்றனர்.

ஆடவருக்கான டெகாத்லானில் தேஜஸ்வின் சங்கர் தேசிய சாதனை ஸ்கோருடன் வெள்ளிப் பதக்கத்தையும், ஆடவர் 800 மீ ஓட்டத்தில் முகமது அப்சல் மற்றொரு சாதனையையும் வென்றனர்.

தடகளப் போட்டியில் ஆடவர் மும்முறை தாண்டுதல் போட்டியில் பிரவீன் சித்திரவேல் மற்றும் பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வித்யா ராம்ராஜ் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

 

Tags :

Share via