ராமேஸ்வரம் - அஜ்மீர் ரயில் ப்ரோஸ்புர் வரை நீட்டிப்பு: தென்னக இரயில்வே அறிவிப்பு

by Editor / 04-10-2023 08:49:28am
ராமேஸ்வரம் - அஜ்மீர் ரயில் ப்ரோஸ்புர் வரை நீட்டிப்பு: தென்னக இரயில்வே அறிவிப்பு

ராமேஸ்வரத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் ரயில் நிலையத்திற்கு ஒரு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.தற்போது புதிய பாம்பன் பால வேலைகள் நடைபெற்று வருவதால் இந்த ரயில் மானாமதுரையில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளின் வசதிக்காக இந்த ரயில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ப்ரோஸ்புர் கன்டோண்மென்ட் வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. நேற்று மானாமதுரையில் இருந்து புறப்பட்ட  மானாமதுரை - அஜ்மீர் வாராந்திர ரயில் (20974) ப்ரோஸ்புர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட்டிக்கப்பட்ட இந்த ரயில் மானாமதுரையில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு வியாழக் கிழமை இரவு 10.45 மணிக்கு  சென்று சேரும். பின்பு அஜ்மீரில் இருந்து இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு வெள்ளிக்கிழமை மதியம் 01.30 மணிக்கு ப்ரோஸ்புர் கன்டோண்மென்ட் சென்று சேரும். மறு மார்க்கத்தில் அக்டோபர் 7  முதல் ப்ரோஸ்புர் கன்டோண்மென்ட் - மானாமதுரை வாராந்திர ரயில் (20973) ப்ரோஸ்புர் கன்டோண்மென்ட்டிலிருந்து சனிக்கிழமைகளில் அதிகாலை 05.55 மணிக்கு புறப்பட்டு இரவு 07.50 மணிக்கு அஜ்மீர் வந்து சேரும். 

பின்பு அங்கிருந்து இரவு 08.10 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை இரவு 08.15 மணிக்கு மானாமதுரை வந்து சேரும். அஜ்மீர் - ப்ரோஸ்புர் கன்டோண்மென்ட் இடையே கிஷன்கர், ஜெய்ப்பூர், ரிங்காஸ், சிகார், ஸூரு, சதுல்புர், டாஹ்சில் பத்ரா, ஹனுமன்கர், ஆக்ரா, மார்வார்,  படிண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்‌ என தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.

 

Tags : ராமேஸ்வரம் - அஜ்மீர் ரயில் ப்ரோஸ்புர் வரை நீட்டிப்பு: தென்னக இரயில்வே அறிவிப்பு

Share via