திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் 5வது நாளாக ரெய்டு.

by Editor / 09-10-2023 09:18:33am
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் 5வது நாளாக ரெய்டு.

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனின் வீடு, ஹோட்டல் உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. முன்னதாக, கடந்த 2020-ம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகாரில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் 5வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகனின் வீடு, தி.நகரில் உள்ள அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளில் சோதனை தொடர்கிறது.ஏற்கனவே அவரது நிறுவனங்களில் பல கோடிரூபாய் பறிமுதல் செய்யப்பட்டநிலையில் சவீதா மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் இருந்து மூட்டைகளில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சோதனையின்போது அங்கிருந்து பெரும் மதிப்பில் வெளிநாட்டு கரன்சிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. 
 

 

Tags : திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் 5வது நாளாக ரெய்டு.

Share via