கண், கை, கால் இல்லாமல் இஸ்ரேலை அலறவிடும் தீவிரவாதி

by Staff / 11-10-2023 01:03:58pm
கண், கை, கால் இல்லாமல் இஸ்ரேலை அலறவிடும் தீவிரவாதி

ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் முகமது டெய்ஃப் 1 கண், 1 கை, 2 கால் இல்லாமல் வீல்சேரில் அமர்ந்து இஸ்ரேல் நாட்டை அலறவிட்டு வருகிறார். சக்கர நாற்காலியில் இருந்த தலைவர் 2002 முதல் ஹமாஸின் இராணுவப் பிரிவின் தலைவராக இருந்து வருகிறார். இஸ்ரேல் நாட்டில் மிகவும் தேடப்பட்டு வரும் பயங்கரவாதியாக இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்ரேல் தாக்குதலில் படுகாயமடைந்தார். அப்போது, அவர் ஒரு கண், ஒரு கை மற்றும் இரண்டு காலை இழந்தார். அந்த கொடூர தாக்குதலில் அவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளையும் இழந்தார்.இஸ்ரேல் அரசு பல முறை முகமது டெய்ஃப்பைக் கொலை செய்ய முயன்றபோது அதில் தப்பிய முகமது, இப்போது அடுத்த தாக்குதலை ஆரம்பித்துள்ளார். அதன்படி, கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் நாட்டில் இறங்கிய ஹமாஸ் படையினர் கொடூர தாக்குதலை நடத்தினர். 20 நிமிடத்தில் 5000 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவினர். மேலும், இஸ்ரேல் நாட்டிலும் புகுந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், 3000க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via