இலஞ்சி-மதுரைச்சாலையில் 50 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி -போக்குவரத்து மாற்றம்.

by Editor / 13-10-2023 09:20:19pm
இலஞ்சி-மதுரைச்சாலையில் 50 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி -போக்குவரத்து மாற்றம்.

தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக விளங்கி வருவது மதுரை-குத்துக்கல்வலசை-இலஞ்சி சாலை ஆகும். இந்த சாலையில் வழியாக தற்போது ஏராளமான வாகன போக்குவரத்து வெகு அதிக அளவில் நடைபெற்று வருகின்றன..இந்த பாதையில் ரயில்வே கேட் ஒன்று உள்ளது. இந்த வழியாக தற்பொழுது அதிகளவில் ரயில்கள் இயக்கப்பட்டு வருவதன் காரணமாகவும், மேலும் பல ரயில்கள் இந்த பாதை வழியாக இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

இதன் தொடர்ச்சியாக இரண்டு புறங்களிலும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருவதை தொடர்ந்து தமிழகத்திலுள்ள தேசிய நெடுஞ்சலைகளில் கடைசி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக தென்னக ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் மாநில அரசும் தேசிய நெடுஞ்சாலை துறையும் ஒப்புதல் அளித்ததன்  காரணமாக கடந்த ஓராண்டு காலமாக நிலங்கள் ஆர்ஜிதம் செய்யகணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்ற முடிந்தன. இதன் தொடர்ச்சியாக  ரயில்வே பாலம் அமைக்கும் பகுதிகளில் இரண்டு புறங்களிலும் மண் மாதிரிகள் எடுத்து சோதனை செய்யும் பணிகள் நடைபெற்றன. 

 தென்னக ரயில்வே சார்பில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளதை தொடர்ந்து மண் மாதிரி எடுக்கும் பணிநடைபெற்றது. இந்த நிலையில் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் தனியார் திருமண மண்டபத்தில் இருந்து 1200 மீட்டர் தூரம் அய்யாபுரம் குளத்துக்கரை வரை 12 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி நாளை 14ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதால் குத்துக்கல்வலசை -இலஞ்சி சாலை  போக்குவரத்து  நிறுத்தப்பட்டு நாளை காலை முதல் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தென்காசி மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

மதுரையில் இருந்து குற்றாலம் வரும் வாகனங்களும் செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு செல்லும் வாகனங்களும் கணக்கப்பிள்ளை வலசை  வழியாக செங்கோட்டை சென்று செங்கோட்டையிலிருந்து கேரளாவுக்கு செல்ல வேண்டும் என்றும் குற்றாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் செங்கோட்டை கணக்குப்பிள்ளை வலசை வழியாக குத்துக்கல்வலசை செல்ல வேண்டும் என்றும் தென்காசி வழியாகவும் சென்று கொள்ளலாம் என்றும் மாவட்டம் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த பணிகள் எவ்வளவு ஆண்டு காலம் நீடிக்கும் என்று அறிவிக்கப்படவில்லை ஆனால் பணிகள் 14ஆம் தேதி நாளை முதல் தொடங்கும் என மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Tags : இலஞ்சி-மதுரைச்சாலையில் 50 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி -போக்குவரத்து மாற்றம்.

Share via