319 கண்ணாடி கிளாஸ்களை தலையில் சுமந்து உலக சாதனை
சைப்ரஸின் பாஃபோஸ் நகரைச் சேர்ந்த அரிஸ்டோடெலிஸ் வலாரிடிஸ் என்பவர் 319 கண்ணாடி கிளாஸ்களை தலையில் சுமந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தலையில் இந்த கிளாஸ்களை சுமந்தபடி நடனமாடுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அரிஸ்டாட்டில் வலாரிடிஸ் இதற்கு முன்பு 49 கண்ணாடி கிளாஸ்களை சுமந்து சாதனை படைத்திருந்தார். இதனை தொடர்ந்து சமீபத்திய சாதனையுடன் அவர் கின்னஸ் புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்தார்.
Tags :