பி.இ, பி.டெக். பொறியியல் படிப்பில் சேர 2 நாட்களில் 41,363 பேர் விண்ணப்பம்

by Editor / 28-07-2021 09:17:02am
பி.இ, பி.டெக். பொறியியல் படிப்பில் சேர 2 நாட்களில் 41,363 பேர் விண்ணப்பம்

பி.இ, பி.டெக். பொறியியல் படிப்பில் சேர, ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கிய 2 நாட்களில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்‍.

கொரோனா அச்சுறுத்தலால் 12ஆம் பொதுத் தேர்வை ரத்து செய்த தமிழக அரசு, அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது.

கடந்த 19ம் தேதி மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, கடந்த 26-ஆம் தேதி துவங்கியது.

விண்ணப்பப் பதிவு தொடங்கிய முதல் நாளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், 2ம் நாள் முடிவில் 41,363 பேர் விண்ணப்பித்துள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via