குடியரசு தலைவர் வருகை: டிஜிபி அலுவலகம் விளக்கம்

by Staff / 26-10-2023 01:50:28pm
குடியரசு தலைவர் வருகை: டிஜிபி அலுவலகம் விளக்கம்

குடியரசு தலைவர் வருகையில் எந்த மாற்றமும் இல்லை என டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது.இதில் கலந்து கொள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சென்னை வருகிறார். இந்நிலையில் பாதுகாப்பு நிறைந்த ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை சேர்ந்த கருக்கா வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக குடியரசுத் தலைவர் வருகையில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்ற கேள்வி இருந்தது. குடியரசு வருகையில் எந்த மாற்றமும் இல்லை என டிஜிபி அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via