அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு கலவரம்

by Staff / 16-07-2023 02:25:20pm
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு கலவரம்

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்ஜியாவின் ஹென்றி கவுண்டியில் உள்ள ஹாம்ப்டன் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் ஹம்ப்டனைச் சேர்ந்த Andre Longmore என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரைப் பிடிப்பவர்களுக்கு 10,000 டாலர்கள் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியுள்ள நிலையில், மக்கள் அன்றாடம் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

 

Tags :

Share via