வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி

by Editor / 22-02-2023 07:21:09am
வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி

ஏசு கிறிஸ்து, தான் சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை அறிந்து உலக மக்களின் பாவங்களை போக்க உபவாசம் இருந்து ஜெபித்தார். இந்த காலத்தை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 நாள் உபவாசம் இருப்பது வழக்கம். இந்த 40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலம் என்றும், புனித நாட்கள் என்றும் கூறி உபவாசிக்கன்றனர். இந்த நாட்களில் பக்தர்களின் நல்ல எண்ணம், ஏற்கனவே செய்த தவறுகளிலிருந்து மனம் திருந்தி நல்வழியில் ஈடுபடவும், தொடர்ந்து ஜபத்தில் ஈடுபடவும், அதற்காக தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தவக்காலம் நேற்று தொடங்கியது. இந்த புனிதநாள் சாம்பல் புதன் என்று அழைக்கப்படுகிறது. சாம்பல் புதனையொட்டி நேற்று நாகை பகுதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடைபெற்றது. சிறப்பு திருப்பலி இதன் ஒரு பகுதியாக கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் இன்று சாம்பல் புதனுடன் துவங்கியது ; உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியில்  நூற்றுக்கும் மேற்பட்ட மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்பு: பாதிரியார்கள் கிறிஸ்தவர்கள் நெற்றியில் சாம்பல் விபூதியிட்டு தவ காலத்தை தொடங்கி வைத்தனர்.

 

Tags : பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி

Share via