பாமக, தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை

by Staff / 31-01-2024 01:04:29pm
பாமக, தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் திமுக, அதிமுக, நாதக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியில் புரட்சி பாரதம், எஸ்டிபிஐ, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை மட்டுமே உள்ளன. இக்கூட்டணியில் பாமக, தேமுதிகவை இழுக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பாஜக கூட்டணியில் புதிய தமிழகம், ஐஜேகே, தமாகா, தமமுக, புதிய நீதிக்கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இதனால் அதிமுக கூட்டணியில் பலம் வாய்ந்த கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் கட்சி தொகுதிப் பங்கீட்டுக் குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
 

 

Tags :

Share via