தமிழகத்தில் மோடி போட்டியிடுவாரா? கோவா முதல்வர்

by Staff / 30-10-2023 12:42:44pm
தமிழகத்தில் மோடி போட்டியிடுவாரா? கோவா முதல்வர்

மதுரை விமான நிலையத்திற்கு வந்த கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்க்கு செய்தியாளர்களை சந்தித்து  தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதால் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் போட்டியிட வாய்ப்பு உள்ளதா அதற்கான முன்னோட்டமா என்ற கேள்விக்கு தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுவது குறித்து எங்கள் கட்சியின் தேசியத் தலைவர்கள் முடிவெடுப்பார்கள். 3வது முறையாக பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பாரா என்ற கேள்விக்கு ஒன்பது ஆண்டுகளில் அவர் செய்த சாதனையை வைத்து 100% மீண்டும் பிரதமராக வருவார். தமிழ்நாடு மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் கட்டமைப்பு வளர்ச்சிக்கு பல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி செய்திருக்கிறார். இந்த வளர்ச்சிகளின் மூலம் மக்கள் மோடிக்கு வாக்களிப்பார்கள் மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்றார். பேட்டியின் போது பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.


 

 

Tags :

Share via