தண்டவாளம் இணைக்கும் பணி: ரயில்கள் ரத்து

by Staff / 01-12-2022 02:15:27pm
தண்டவாளம் இணைக்கும் பணி: ரயில்கள் ரத்து

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலைய யார்டு பகுதியில் தண்டவாளம் இணைக்கும் பணி நடைபெறுவதால் 25 ரெயில்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று முதல் வரும் டிசம்பர் மாதம் 2-ந் தேதி வரை 3 நாட்களுக்கு ஈரோட்டில் இருந்து மேட்டூர் டேம் செல்லும் ரெயில் (06407), மேட்டூர் டேமில் இருந்து ஈரோடு வரும் ரெயில் (06408) உள்ளிட்ட ரயில்கள் ரத்தாகியுள்ளது.

 

Tags :

Share via