முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 22 ஆயிரத்து 536 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கமுடிவு.

by Editor / 31-10-2023 09:49:48pm
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்நடந்த அமைச்சரவைக்  கூட்டத்தில்  22 ஆயிரத்து 536 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கமுடிவு.

 தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  தலைமையில் இன்று மாலை தலைமைச் செயலகத்தில், அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
 தமிழக அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், அதில் குறிப்பாக 22 ஆயிரத்து 536 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், அடுக்குமாடி பொது குடியிருப்பு களுக்கான மின் இணைப்புக்கான கட்டணம் ரூபாய் 8 ல் இருந்து 5 ஆக குறைக்கப்பட்டது. இந்த கட்டண குறைப்பு நவம்பர் ஒன்றாம் தேதியான நாளை  முதல் அமலுக்கு வருகிறது, 10 வீடுகளுக்கு குறைவாக 3 மாடிகளுக்கு மிகாத மின் தூக்கி இல்லாத குடியிருப்புகளுக்கு சலுகை பொருந்தும் என்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோவை, ராணிப்பேட்டை,ஆகிய  மாவட்டங்களில் ரூபாய்.7108 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 22 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க அமைச்சரை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், பத்திரிகையாளர்களுக்கு  நிலம் வழங்குவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், எட்டு நிறுவனங்களுக்கு தொகுப்பு சதவிகித அடிப்படையில் சலுகை வழங்கவும் அமைச்சரை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

Tags : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டம்

Share via