தீண்டாமை சுவர் இடித்து அகற்றம் - வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

by Admin / 01-11-2023 11:25:14pm
 தீண்டாமை சுவர் இடித்து அகற்றம் - வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

 தீண்டாமை சுவர் இடித்து அகற்றம் - வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வடக்குபட்டி ஊராட்சியில் 8 ஆண்டுகளாக பொதுமக்களின் நடைபாதை தெருவை ஆக்கிரமித்து, வீட்டு தாழ்வாரம் மற்றும் இரு சுவர்கள் கட்டி ராஜேஷ் கண்ணன் என்பவர் ஆக்கிரமித்து இருந்தார். 

மேலும், போத்திராஜ் என்பவர் குடிநீர் தொட்டி உள்ள அரசு புறம்போக்கு இடத்தை கம்பி வேலி அமைத்து ஆக்கிரமித்து இருந்தார். இந்த இரண்டு ஆக்கிரமிப்புகளையும் செய்தவர்கள் நீதிமன்றத்தில் இது தங்களுக்கான இடம் என்று தெரிவித்தனர். வழக்கு அரசுக்கு சாதகமாக உரிமையியல் நீதிமன்றத்தில் கடந்த 2017-ல் தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. மேல்முறையீட்டு நீதிமன்றமும் அதையே உறுதி செய்தது. ஆனாலும் ஆக்கிரமிப்புதாரர்கள் தானாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. 

இதையடுத்து கோவில்பட்டி வட்டாட்சியர் லெனின் தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் செந்தில், குருவிகுளம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமி முன்னிலையில் இளையரசனேந்தல் வருவாய் ஆய்வாளர் செய்யது அலி, கிராம நிர்வாக அலுவலர்கள் போத்திராஜ், திருவேங்கடராஜ், அய்யனார் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் மேற்கு காவல் நிலைய போலீஸார் பாதுகாப்புடன், ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர்.அதே தெருவின் மற்றொருபுரத்தில் பிரதான சாலைக்கு நேரடியாக செல்லும் தெருவை அடைத்துக் கட்டப்பட்ட சுவர் “தீண்டாமை சுவர்”என்று எண்ணத் தோன்றுகிறது என புகார் தொடர்ந்து வந்ததால் அதுகுறித்து வட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து,  இடித்து அதனையும் அகற்றினர். எனவே தெருவில் இரு பகுதிகளிலும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் மக்கள் எளிதாக சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

 

Tags :

Share via