டாக்டர் பட்டத்தை விட சங்கரய்யா என்ற பெயர்ச்சொல் மேலானது

by Staff / 03-11-2023 12:54:26pm
டாக்டர் பட்டத்தை விட சங்கரய்யா என்ற பெயர்ச்சொல் மேலானது

டாக்டர் பட்டத்தை விட சங்கரய்யா என்ற பெயர்ச்சொல் மேலானது என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசுக்கும், ஆளுநருக்கு கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவது தடைபட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, “டாக்டர் பட்டத்தை விட சங்கரய்யா என்ற பெயர் மேலானது, இனி ஆளுநர் ஒப்புதல் தந்தாலும், டாக்டர் பட்டம் வழங்கப்பட்டாலும் அதனை இடதுகையால் புறக்கணிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Tags :

Share via