நீட் எதிர்ப்பு - கையெழுத்திட்டார் கே.எஸ்.அழகிரி
சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில் கே.எஸ்.அழகிரியிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து பெற்றுள்ளார். தமிழகம் முழுவதும் திமுக சார்பாக நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம் திமுக இளைஞரணி சார்பாக பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு சென்ற அமைச்சர் உதயநிதி, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் நீட் எதிர்ப்பு இயக்கம் சார்பில் கையெழுத்து பெற்றார். மேலும், 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகளை பெறும் வகையில் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
Tags :