அயோத்தியில் இன்று அதிகாலையில் திடீரென நிலநடுக்கம்

by Editor / 05-11-2023 08:14:45am
அயோத்தியில் இன்று அதிகாலையில் திடீரென நிலநடுக்கம்

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் இன்று அதிகாலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. 3.6 ரிக்டர் அளவுகோளில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அயோத்திக்கு வடக்கே 215 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

 

Tags : அயோத்தியில் இன்று அதிகாலையில் திடீரென நிலநடுக்கம்

Share via