ஜெகத்ரட்சகன் வீட்டில் 2வது நாளாக சோதனை

by Staff / 06-10-2023 12:11:41pm
ஜெகத்ரட்சகன் வீட்டில் 2வது நாளாக சோதனை

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் வீடு, அவருக்கு சொந்தமான கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இன்று 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை தி.நகரில் உள்ள ஜெகத்ரட்சகனின் அலுவலகம், குரோம்பேட்டையில் உள்ள வீடு மற்றும் அண்ணாநகரில் இருக்கும் பிரபல ஐஏஎஸ் பயிற்சி மையம், பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரி உட்பட ஜெகத்ரட்சகன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via