விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் ஆரோவில் போன்ற கடலோர பகுதிகளில் கடல் சீற்றம்.  குளிக்க தடை

by Editor / 14-11-2023 03:14:18pm
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் ஆரோவில் போன்ற கடலோர பகுதிகளில் கடல் சீற்றம்.  குளிக்க தடை

 விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நேற்று மாலையிலிருந்து விட்டு விட்டு மழை பெய்ய தொடங்கியது இந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் இருந்து திண்டிவனம்,வானூர்,மற்றும் கடலோரப் பகுதிகளாக கோட்டகுப்பம்,பொம்மையார்பாளையம், ஆரோவில்,போன்ற பகுதிகளில் விடிய விடிய மழை  வெளுத்து வாங்கியது.தொடர்ந்து கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுவதாலும்  மழை காரணமாகவும்  மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் மீனவர்கள் கடல் சற்று சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் தங்களது படகுகளை பத்திரமாக நிறுத்தி வைத்துள்ளனர். கனமழை காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பாக பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளை நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் ,நீர்நிலை அருகே உள்ளவர்கள்  பாதுகாப்பாக இருக்கவும்.அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதனால் பேரிடர் மீட்புக்குழு மற்றும் தீயணைப்பு துறை படகு மற்றும் மீட்பு பொருட்களுடன் தயார் நிலையில் உள்ளது.கோட்டகுப்பம் மற்றும் ஆரோவில் பகுதி சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடம் என்பதால் கடலில் குளிக்க மாவட்ட காவல்துறை தடை விதித்துள்ளது.

 

Tags : விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் ஆரோவில் போன்ற கடலோர பகுதிகளில் கடல் சீற்றம்.  குளிக்க தடை

Share via