அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காததே பெண் உயிரிழப்பிற்கு காரணம்  உறவினர்கள் மறியல். 

by Editor / 14-11-2023 07:58:06pm
அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காததே பெண் உயிரிழப்பிற்கு காரணம்  உறவினர்கள் மறியல். 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா பொய்கை அருகில் உள்ள கள்ளம்புலி கிராமத்தை சார்ந்தவர் குமார் இவரது மனைவி சமுத்திரக்கனி இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது இந்த நிலையில் மீண்டும் சமுத்திரக்கனி கர்ப்பமாகி இருந்து உள்ளார் இந்த நிலையில் அவர் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது இதன் தொடர்ச்சியாக அவருக்கு 29 12 2023 அன்று பிரசவத்திற்கு தேதி குறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது இந்த நிலையில் 8 11 2023 அன்று பிரசவத்திற்கு ரெடியானதில் அவரை தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வும் பின்னர் அங்கிருந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கடந்த எட்டாம் தேதி அன்று அனுப்பி வைத்துள்ளனர் அங்கு அவருக்கு அனுமதிக்கப்பட்ட அன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது இந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில்  திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் மஞ்சகாமாலை அதிகமாகி அவரது மனைவி சமுத்திரகனி இன்று காலை 8 மணி அளவில் பலியாகி உள்ளார் அவருக்கு தவறான சிகிச்சை அளித்ததாகவும் அதன் காரணமாக தான் அவர் பரிதாபமாக பலியானதாகவும் மஞ்சள் காமாலை இருப்பது பற்றி எந்த விதமான அறிகுறியும் மருத்துவ பரிசோதனைகளில் தெரிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்து மருத்துவத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் மனு அளித்தனர் அந்த மனுவில் தனது மனைவியின் மரணத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு அந்த மனுவில் குமார் தெரிவித்துள்ளார் மேலும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் இதன் காரணமாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது.

 

Tags : அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காததே பெண் உயிரிழப்பிற்கு காரணம்  உறவினர்கள் மறியல். 

Share via