75வது சுதந்திர தின விழா சென்னையில் 2வது நாள் ஒத்திகை

by Editor / 11-08-2022 01:46:48pm
75வது சுதந்திர தின விழா சென்னையில் 2வது நாள் ஒத்திகை


75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை கோட்டையில் பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து 6, 11, 13ம் தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 6ம் தேதி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. ஒத்திகை நடைபெறும் நாட்களில் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் நேரம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை முதல் தலைமை செயலகம் வரை போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 2வது நாள் ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடங்கியது. காலை தொடங்கிய காவல் துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சியானது தற்போது ராஜாஜி சாலையில் நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via