ஆசிரியையை எரித்துக் கொன்ற சக ஆசிரியர்

by Staff / 11-02-2024 01:24:40pm
ஆசிரியையை எரித்துக் கொன்ற சக ஆசிரியர்

பெரம்பலூர் அருகே அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தீபா, வெங்கடேசன் இருவரும் கடந்தாண்டு நவம்பரில் மாயமான வழக்கில் 3 மாதங்களுக்குப் பிறகு வெங்கடேசன் சென்னையில் பிடிபட்டார். வாங்கிய பணத்தை திருப்பிக் கேட்டதால் தீபாவை கொலை செய்துவிட்டு தலைமறைவானதாக வாக்குமூலம் அளித்துள்ளார். திருமயம் அருகே தீபாவின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாக வெங்கடேசன் கூறிய நிலையில், அப்பகுதியில் சில எலும்புகளை கைப்பற்றிய போலீசார் தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

 

Tags :

Share via