18 ஆம் தேதி சனிக்கிழமை அன்று தமிழ்நாடு சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூடுகிறது..

by Editor / 16-11-2023 12:55:01pm
18 ஆம் தேதி  சனிக்கிழமை அன்று தமிழ்நாடு சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூடுகிறது..

தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்பு சட்டமன்ற கூட்டம் வருகிற சனிக்கிழமை 18 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் மீண்டும் நிறைவேற்ற சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடக்கிறது. தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான மசோதா, கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளாக குறைப்பது தொடர்பான மசோதா, பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே செயல்படும் வகையிலான மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் மீண்டும் 10-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்.என்று கூறப்படுகிறது.


 

 

Tags : 18 ஆம் தேதி சனிக்கிழமை அன்று தமிழ்நாடு சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூடுகிறது..

Share via