மது குடிப்பவர்களை தடுக்க முடியாது - அமைச்சர் பேச்சு

by Staff / 23-11-2023 01:12:33pm
மது குடிப்பவர்களை தடுக்க முடியாது - அமைச்சர் பேச்சு

மகிழ்ச்சிக்காக குடிப்பவர்களை தடுக்க முடியாது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். தீபாவளியின்போது மது மட்டுமின்றி அனைத்து பொருட்களும் கூடுதலாக விற்பனையானது என குறிப்பிட்ட முத்துசாமி, எதையும் திட்டமிட்டு செய்யவில்லை அது தானாக நடக்கிறது என்றார். பாக்கெட்டுகளில் மதுவை விற்பது குறித்த ஆய்வறிக்கை தயாராக உள்ளது. அதுகுறித்தான அறிவிப்பு விரைவில் வரும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via