பவர் டேபிள் நிறுவனங்கள் 2-வது நாளாக ஸ்டிரைக்-ரூ.10 கோடி வர்த்தகம் பாதிப்பு

by Admin / 29-07-2021 05:01:27pm
பவர் டேபிள் நிறுவனங்கள் 2-வது நாளாக ஸ்டிரைக்-ரூ.10 கோடி வர்த்தகம் பாதிப்பு


   
பவர்டேபிள் சங்கத்தினர் வலியுறுத்திய கோரிக்கைகளுக்கு தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என பவர் டேபிள் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

திருப்பூர் பவர் டேபிள் நிறுவனங்களுக்கு தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) மற்றும் பவர்டேபிள் உரிமையாளர் சங்கங்கள் மேற்கொள்ளும் ஒப்பந்த அடிப்படையில் பவர்டேபிள் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

கட்டண உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெறாத நிலையில் பவர்டேபிள் உரிமையாளர் சங்கம் ‘சைமா’வுக்கு கடிதம் அனுப்பியது. அதற்கு சைமா அளித்த பதில் திருப்திகரமாக இல்லாததால்  பவர்டேபிள் உரிமையாளர் சங்கம் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை அறிவித்தது.
 
அதன்படி  நேற்று முதல் பவர் டேபிள் நிறுவனங்கள் காலவரையற்ற  வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த தொடர் போராட்டம் காரணமாக பவர் டேபிள் நிறுவனங்களில் பணியாற்றி வந்த 1 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

முதல் நாளான நேற்று ரூ.5 கோடி வர்த்தகம் பாதிக்கபட்டுள்ள நிலையில் 2 வது நாளாக இன்று ரூ.10 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. பவர்டேபிள் சங்கத்தினர் வலியுறுத்திய கோரிக்கைகளுக்கு தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என பவர் டேபிள் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via