பிரதமர் பாதுகாப்பு: 7 காவலர்கள் சஸ்பெண்ட்

by Staff / 26-11-2023 02:40:05pm
பிரதமர் பாதுகாப்பு: 7 காவலர்கள் சஸ்பெண்ட்

பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு விதிமீறல் விவகாரத்தில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர், 2 டிஎஸ்பி உட்பட 7 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு பஞ்சாப் சென்ற பிரதமர் மோடியை, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மறித்தனர். இதன் காரணமாக பிரதமரின் வாகனம் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் சுமார் 20 நிமிடம் நிறுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் தற்போது 7 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via