துணை முதல்வர் பதவி; அது முதலமைச்சரின் முடிவு - அமைச்சர் உதயநிதி

by Staff / 27-11-2023 01:21:02pm
துணை முதல்வர் பதவி; அது முதலமைச்சரின் முடிவு - அமைச்சர் உதயநிதி

துணை முதல்வர் பதவி; அது முதலமைச்சரின் முடிவு என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது, துணை முதல்வர் பதவி என்பது முதலமைச்சர் எடுக்கும் முடிவு. ஒவ்வொரு பிறந்தநாளிலும் மக்கள் நலத்திட்டங்கள் செய்வதன் மூலம் திருப்தி இருக்கிறது. டிசம்பர் 17-ல் சேலத்தில் நடக்கும் மாநாட்டில் தொண்டர்கள் எழுச்சியோடு கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார். எனினும் டிசம்பர் மாநாட்டுக்குப் பிறகு உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் எனவும் பேசப்படுகிறது.

 

Tags :

Share via